ECONOMYPBTSELANGOR

ஷா ஆலம், கிள்ளான் வட்டாரத்தில் நேற்று மேலும் 4,000 பேர் வெள்ள உதவி நிதி பெற்றனர்

ஷா ஆலம், பிப் 23-  இங்குள்ள கெமுனிங் உத்தாமா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வெள்ள நிவாரண நிதி வழங்கும் நிகழ்வில் மேலும் 4,000 பேர் நிதியுதவி பெற்றனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதியுதவி வழங்கும் நடவடிக்கை இம்மாத இறுதிக்குள் முற்று பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஸமானி அகமது மன்சோர் கூறினார்.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் பணி இம்மாதம் 28 ஆம் தேதிக்குள் முற்று பெறும் என எதிர்பார்க்கிறோம். நிதி வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக ஷா ஆலம் மாநகர் மன்றம் கிள்ளான் மாவட்ட நில அலுவலகத்திற்கு மண்டபங்களை ஏற்பாடு செய்துள்ளது என்று அவர் சொன்னார்.

நிதி வழங்கும் மையங்களில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதி செய்யும் பணியில் போலீசாரும் மாநகர் மன்ற அமலாக்கப் பிரிவினரும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் பங்கிட் சிலாங்கூர் திட்டத்தைத் தொடக்கியது.

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.

 


Pengarang :