ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் ஒரு மாய ஜால வித்தை நிகழ்ச்சி

ஷா ஆலம், பிப் 23: பிப்ரவரி 27 அன்று சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் (SFV) சர்வதேச மாய  ஜால வித்தைக்காரர் முகமது ஹஃபிட்ஸ் ஒஸ்மான் பார்வையாளர்களை உற்சாகப் படுத்துவார்.

அதன் மேலாளர் கூறுகையில், மந்திரவாதி ஹஃபிட்ஸ் என அழைக்கப்படும் முகமது ஹஃபிட்ஸ்  ECO Bridge என்னும் ஈகோ பிரிட்ஜில்  மதியம் 12 மணி முதல் 2 மணி வரை தனது பல்வேறு மாய ஜால வித்தை சேகரிப்புகளைக் காண்பிப்பார்.

” ஒரு மாய ஜால வித்தை நிகழ்ச்சி சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் ஒரு கூடுதல் ஈர்ப்பாகும். இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரியும் பார்வையாளர்கள், மந்திரவாதி ஹஃபிட்ஸ் மயக்கும் செயலால் அவர்கள் மகிழ்வார்கள்.

“எனவே,  மாய ஜால வித்தைகளை விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்து  வரலாம், இதனால் அவர்களும் இங்குப் புதிய அனுபவங்களை உருவாக்க முடியும், ”என்று நோர் ரஷிதா முகமது ரைஹான் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதற்கிடையில், நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் சிலாங்கூர் ஃபுரூட் வேலியைச் சுற்றி டிராமில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றார்.

இந்நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டு பெரியவர்களுக்கு RM15, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு RM10 ஆகும்.

சிலாங்கூர் ஃபுரூட் வேலி ஆனது பெஸ்தாரி ஜெயாவில் கிட்டத்தட்ட 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் பிளிம்பிங், டுரியான், மாம்பழம், கொய்யா, பலாப்பழம், திராட்சை போன்ற 20 வகையான பழங்களைக் கொண்டுள்ளது.


Pengarang :