ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

இந்தோ. வீட்டுப் பணிப்பெண்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல்

புத்ராஜெயா, பிப். 23 – மலேசியாவும் இந்தோனேசியாவும் கூட்டாக முடிவு செய்த தேதியில் இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்களைத் தருவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாகக் கையெழுத்திட இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சரவணனும் அவரது இந்தோனேசிய மனித வள அமைச்சர் இடா ஃபவுசியாவும் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இரு நாடுகளும் பயன்பெறும். குறிப்பாக கோவிட்-19 தொற்று நோய் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை உருவாக்கியுள்ளதால் வேலை தேடும் தொழிலாளர்களுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் பயன் கிடைக்கும். அதே சமயம், வெளிநாட்டுப் பணிப் பெண்களின் சேவையை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் முதலாளிகளும் பலனடைவர் என்றார் அவர்.

இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி பாலியில் கையெழுத்தானது. , அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி காலாவதியான அந்த ஒப்பந்தத்தைத் திருத்துவதற்கான நெறிமுறை கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.


Pengarang :