ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

செல்கேர் கிளினிக்குகளில் ஊக்கத் தடுப்பூசி பெற செலங்கா செயலி வழி முன்பதிவு செய்யலாம்

ஷா ஆலம், பிப் 24- செல்வேக்ஸ் பூஸ்டர் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மாநிலத்திலுள் அனைத்து செல்கேர் கிளினிக்குகளிலும் வரும் மாரச் மாதம் முதல் தினசரி தலா 150 டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும்.

இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலியில் முன்பதிவு செய்து அதில் பட்டியலிடப்பட்டுள்ள கிளினிக்குகளுக்கேற்ப குறியீட்டுப் பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளும்படி செல்கேட் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி தெங்கு லெஸ்தா தெங்கு அலாடின் கேட்டுக் கொண்டார்.

கிளினிக்குகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஊக்கத் தடுப்பூசி பெற விரும்புவோர் முன்கூட்டியே தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே  இரண்டு டோஸ் சினோவேக் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு அதே வகையைச் சேர்ந்த மூன்றாது தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் விளக்கினார்.

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்கு ஏதுவாக 157,000 தடுப்பூசிகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

செல்கேர் கிளினிக்குளின் பட்டியலை https://selcareclinics.com/ourclinics  எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது செலங்கா செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.


Pengarang :