ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட்-19 நோய்த் தொற்று- நேற்று 32,070 பேர் பாதிப்பு

ஷா ஆலம், பிப் 25- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று உயர்ந்த பட்ச எண்ணிக்கையாக 32,070 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 31,199 பேராக இருந்தது..

கடுமையான பாதிப்புகளைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள் எண்ணிக்கை 180 அதாவது 0.56 விழுக்காடாகவும் பாதிப்புக்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 31,890 பேர் அல்லது 99.44 விழுக்காடாகவும் உள்ளது.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 180 பேரில் 51.67 விழுக்காட்டினர் அல்லது 49 பேர் தடுப்பூசியை முழுமையாக அல்லது அறவே பெறாதவர்கள்.

மேலும் 93 பேர் அல்லது 51.67 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் செலுத்திக் கொள்ளாதவர்களாவர். ஊக்கத் தடுப்பூசி பெற்றப் பின்னரும் நோய்க்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 38 அல்லது 21.11 விழுக்காடாக உள்ளது.

பிரிவு வாரியாக கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 8,216 சம்பவங்கள் (25.62 விழுக்காடு)

2 ஆம் பிரிவு- 23,674 சம்பவங்கள் (73.82 விழுக்காடு)

3 ஆம் பிரிவு- 95 சம்பவங்கள் (0.30 விழுக்காடு)

4 ஆம் பிரிவு- 46 சம்பவங்கள் (0.14 விழுக்காடு)

5 ஆம் பிரிவு- 39 சம்பவங்கள் (0.12 விழுக்காடு

நேற்றையச் சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 37 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது


Pengarang :