ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான், பெட்டாலிங் மாவட்டங்களில்  நீர் விநியோகம் கட்டங் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும்

ஷா ஆலாம், பிப் 25-  புக்கிட் ஜெலுத்தோங், யு8 இல் உள்ள பம்ப் ஹவுஸ் நிலையத்தில்  பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின்சார சீரமைப்பு மற்றும்  பழுது பார்ப்பு பணி இன்று மதியம்  முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்டாலிங் மற்றும் கிள்ளான் பகுதியைச் சுற்றியுள்ள 41 பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அதன் நிறுவன வர்த்தகத் தொடர்புத் தலைவர் எலியா பஸேரி கூறினார்.

புக்கிட் ஜெலுத்தோங்கில் உள்ள பம்ப் ஹவுஸின் மின்சார அமைப்பு இன்று சேதமடைந்த காரணத்தால் இன்று காலை 9.30 மணி முதல் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அவசர சீரமைப்பு வேலைகளை மேற்கொண்டது.

குடியிருப்பு பகுதியின் இடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து பயனீட்டாளர்களுக்கான நீர் விநியோக நேரம் வேறுபடும் என்று   என்று எலினா பசேரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டேங்கர் லோரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் எனக் கூறிய அவர், இந்நீர் விநியோகத்தில் முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

லோரிகள் மூலம்  நீரைப் பெறும்போது 
 மக்கள் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கவும் முகக் கவசம் அணியவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல் வருமாறு:

Wilayah Shah Alam/ Klang

BIL.  KAWASAN
1.  Seksyen 22
2.  Seksyen 26
3.  Seksyen 27
4.  Seksyen 28
5.  Seksyen 29
6.  Seksyen 30
7.  Taman Subang Mas
8.  Pinggiran Subang USJ3
9.  Kg Kebun Bunga
10.  Kg Bukit Lanchong
11.  Kemuning Utama (Seksyen 33)
12.  Bukit Kemuning (Seksyen 32)
13.  Taman Desa Kemuning
14.  Taman AMG Bt 5 Bukit Kemuning

BIL.  KAWASAN
15.  Bulatan Bt 4-8 Jalan Bukit Kemuning
16. Taman Bukit Rimau
17. Jalan Bukit Rimau
18. Bandar Putra Heights
19. Bandar Putera
20. Bukit Naga
21. Jalan Samarinda (Taman Mesra Indah)
22. Desa Latania (Seksyen 36)
23. Kg Sungai Kandis
24. Taman Kandis Permai
25. Taman Maznah
26. Jalan Hulubalang
27. Jalan Dato Abd Hamid
28. Jalan Dato Dagang

Wilayah Petaling

BIL.  KAWASAN
1. Putra Avenue
2. Putra Harmoni
3. Putra Setia
4. Subang Height
5. Taman Perindustrian UEP (Jalan TP 7)
6. Taman Pinggiran USJ 1
7. Taman Pinggiran USJ 2
8. Taman Pinggiran USJ 3
9. USJ 3 (3A)
10. USJ 3 (3B)
11. USJ 3 (3C)
12. USJ 3 (3D)
13. USJ Height



Pengarang :