ALAM SEKITAR & CUACAANTARABANGSAECONOMY

பருவநிலை மாற்றம் ஆசியாவில் உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்

கோலாலம்பூர், மார்ச் 1- பருவநிலை மாற்றம் மலேசியர்கள் மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆய்வு கூறுகிறது.

ஆசியாவின் கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட “ஆசியாவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பருவநிலையின் அவசியம்“ என்ற அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் எவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது தொடர்பில் போதுமான விழிப்புணர்வு இல்லாமையை இந்த அறிக்கை மையப்படுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் உடலில்  நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும் என்பதோடு சிறார்கள் தொடர்ச்சியாக நோய்த் தொற்று, ஒவ்வாமை, மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கும் ஆளாகவும் நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்தது.

உலகளாவிய  பருவநிலை மாறுபாடுகளை முழு அளவில் எதிர்கொள்ளக் கூடிய ஆசியா மற்றும் ஓசானியா வட்டாரங்கள் பருவ நிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கக்கூடிய பிரதேசங்களாக விளங்குகின்றன என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

ஏ.ஏ.எஸ்.எஸ்.ஏ. ஏற்பாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சின் கீழுள்ள மலேசிய அறிவியல் அகாடமி நடத்திய வெப்பினர் கலந்தாய்வில் இந்த அறிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு அரசியல் ரீதியான உந்துதல் இருப்பது அவசியம் என்பதோடு பருவநிலை மாற்றத்தால் மனுக்குலத்திற்கு ஏற்படும் உயர்ந்தபட்ச ஆபத்தை தடுப்பதில் சமூகமும் சட்ட வரைவாளர்களும் அக்கறை காட்டுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Pengarang :