ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹரி ராயாவிற்கு முன் நான்கு அன்றாட தேவைகள் மலிவாக விற்கப்படுகின்றன

சபா பெர்ணம், மார்ச் 1: மக்கள் உதவி விற்பனைத் திட்டத்தின் மூலம் ஹரி ராயாவரை கோழி, முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகிய நான்கு அன்றாட தேவைகளை மலிவு விலையில் மாநில அரசு விற்பனை செய்கிறது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் இந்த திட்டம், நடக்கும். இது இந்த மாதத் தொடக்கத்தில் டத்தோ மந்திரி புசார் அறிமுகப்படுத்திய ஏசான் உணவு விலை தலையீட்டு திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

இந்த நோக்கத்திற்காக மொத்தம் 62 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாயத் தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹஷிம் கூறினார், அதாவது சிலாங்கூர் வேளாண் சந்தையின் கீழ் 24 இடங்கள், மற்றவை சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் (PKPS) கீழ் உள்ளன.

“இந்த நிகழ்ச்சியின் போது விற்கப்படும் 10,000 கோழிகள், 3,100 கிலோ புதிய இறைச்சி, 6,200 கிலோ கானாங்கெளுத்தி மீன் மற்றும் செலாயாங் மீன் அதனுடன் 315,000 பி தர முட்டைகளை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.

விற்பனை நடைபெறும் இடம் கண்டறியப்பட்டு, மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகரிப்பு இருக்கலாம். தற்போதைக்கு, மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்க உதவுவதே மாநில அரசின் அக்கறை,” என்று இன்று தாமான் பெர்ஜெயா மக்கள் மன்றத்தில் மக்கள் உதவி விற்பனைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

இஸாம் தனது தரப்பு வேறு சில பொருட்களைச் சேர்க்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் அது குறித்த பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெற்ற பிறகு ஒரு மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மக்கள் உதவி விற்பனைத் திட்டத்தில் உள்ள பொருட்களின் விலைகள் கீழ்வருமாறு:

நடுத்தரக் கோழி: RM12/கிலோ
கிரேடு B முட்டைகள்: RM10/அட்டை
புதிய திட இறைச்சி: RM35/கிலோ
கானாங்கெளுத்தி மீன்/செலாயாங் (Q-Fish): RM8/ ஒரு பொதி


Pengarang :