ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான், திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச் 2- கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று உயர்வு கண்டது. காலை 8.00 மணி நிலவரப்படி இவ்விரு மாநிலங்களிலும் 26,447 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

திரங்கானுவில் இன்று 4,549 குடும்பங்களைச் சேர்ந்த 17,384 பேர் துயர் துடைப்பு  மையங்களில் தங்கியுள்ளனர். நேற்று 4,269 குடும்பங்களைச் சேர்ந்த 16,576 பேர் அங்கு அடைக்கலம் நாடியிருந்தனர்.

கெமாமான், டுங்குன், உலு திரங்கானு, கோல திரங்கானு, கோல நெருஸ், பெசட், செத்தியு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 87 துயர் துடைப்பு மையங்களில் இவர்கள் தங்கியுள்ளனர்.

கிளந்தானிலும் வெள்ள அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று துயர் துடைப்பு மையங்களில் 8,678 பேர் தங்கியிருந்த வேளையில் இன்று காலை 8.00 மணியளவில் அந்த எண்ணிக்கை 9,063 ஆக உயர்வு கண்டது.

பாசீர் மாஸ், தும்பாட், தானா மேரா, பாசீர் பூத்தே ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 29 தற்காலிக நிவாரண மையங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 


Pengarang :