ANTARABANGSAECONOMY

உக்ரேன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பை மலேசியா கடுமையாக எதிர்க்க வேண்டும்- அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 2– ரஷியா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையிலான கெடுபிடி தொடர்பில் மலேசியத் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்பதோடு அந்த ஆக்கிரமிப்பை அது வன்மையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் மலேசியா தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அதை விடுத்து மௌனம் காக்கும் போக்கை அது கடைபிடித்தால் நாட்டின் பாதுகாப்புக்குக் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இவ்விவகாரத்தில் சில சர்ச்சைகள் நிலவுகின்றன. காரணம், நாம் அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்பச் செயல்படுகிறோம் எனச் சில குற்றஞ்சாட்டுகின்றனர். அமெரிக்காவின் வன்முறை, சிரியா அல்லது லிபியா தலையீட்டை நாம் ஒருபோதும் ஆதரித்ததில்லை.

நாம்  கடுமையாக எதிர்க்க வேண்டும். உக்ரேன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்று மக்களவையில் இன்று விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

உக்ரேனின் ஆகக் கடைசி நிலவரங்கள் குறித்துப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது ஆழ்ந்த வருத்தத்தைக் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.  இரு நாடுகளுக்குமிடையிலன நெருக்கடிக்கு விரைவில் அமைதி தீர்வு காணப்படும் எனத் தாம்  நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :