ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போர் விமானங்கள் சீறிப் பாய்கிறதா? பதற்றம் வேண்டாம், அது வெறும் பயிற்சியே –டி.யு.டி.எம். விளக்கம்

கோலாலம்பூர்,  மார்ச் 3- போர் விமானங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கை மற்றும் தயார் நிலைப் பயிற்சியை அரச மலேசிய ஆகாயப்படை (டி.யு.டி.எம்.) இன்று தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.

இந்த பயிற்சிகள் சிலாங்கூர், பகாங், திரங்கானு, பினாங்கு ஆகிய மாநிலங்களில் நடத்தப்படுகிறது  என்று ஆகாயப் படை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இந்த பயிற்சியின் போது குறிப்பிட்ட இடங்களில் குறிப்பாக சிலாங்கூர், திரங்கானுவின் கோங் கெடாக் ஆகாயப்படைத் தளம், பட்டவெர்த் ஆகாயப் படைத் தளம், குவாந்தான் ஆகாயப்படைத் தளம் ஆகிய பகுதிகளில் போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்து போர் தந்திர பயிற்சிகளில் ஈடுபடும் என்று அது தெரிவித்தது.

இப்பயிற்சி காலத்தின் போது போர் விமானங்கள் தாழ்வாகப் பறப்பதைக் கண்டு பொதுமக்கள் பற்றமோ அச்சமோ அடையத் தேவையில்லை. பயிற்சியின் ஒரு பகுதியாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.

நாட்டின் இறையாண்மையைக் காப்பதில் சிறப்பு ஆகாயப் படை மற்றும் துணை தளவாடப் பிரிவு உறுப்பினர்களுக்கு உள்ள ஆற்றலை மதிப்பிடும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது  எனவும் அந்த அறிக்கை கூறியது.


Pengarang :