ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோவிட்-19 காலத்தில் முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு- சிலாங்கூரின் பொருளாதார ஊக்குவிப்புக்கு எடுத்துக்காட்டு

ஷா ஆலம், மார்ச் 5- கடந்தாண்டு முதல்  நான்கு அனைத்துலக தரம் வாய்ந்த நிகழ்வுகளை சிலாங்கூர் அரசு நடத்தியதானது பொருளாதரத்தை வலுப்படுத்த மாநில அரசு தொடர்சியாக எடுத்து வரும் முயற்சிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது.

கோவிட்-19 நோய்த் தொற்று அச்சுறுத்தலை எதிர்நோக்கிய போதிலும்  விரைவாகவும் புதிய இயல்பைக் கடைபிடிப்பதில் நேர்மறை போக்குடனும் சிலாங்கூர் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் திறக்கப்பட்டவுடன் நான்கு அனைத்துலக நிகழ்வுகளை சிலாங்கூர் அரசு ஏற்பாடு செய்தது. சிலாங்கூர் 2021 அனைத்துலக வர்த்தக உச்ச நிலை மாநாடு, சிலாங்கூர் வான் போக்குரத்து கண்காட்சி, 2022 ஆசிய குழு நிலையிலான பூப்பந்து போட்டி மற்றும் தற்போது நடைபெற்று வரும் சிலாங்கூர் அனைத்துலக ஹலால் (செஹாக்) மாநாடு ஆகியவையே அந்த நிகழ்வுகளாகும் என அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பை எதிர்நோக்கிய போது வாழ்க்கையை எவ்வாறு சம்ன்படுத்திக் கொள்வது என்ற பாடத்தை நாம் கற்றுக் கொண்டோம் என்று செல்ஹாக் மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வுக்கு வழங்கிய உரையில் அவர் குறிப்பிட்டார்.

சுபாங் டோர்செட் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஹலால் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :