ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தினசரி நோய்த்தொற்றுகள் அதிகபட்சமாக 33,406 தொற்றுகளாகப் பதிவாகின

ஷா ஆலம், மார்ச் 6: தினசரிக் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை முந்தைய நாளுடன் ஒப்பிட்டால் நேற்று 197 தொற்றுகள் அதிகரித்து 33,406 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்ச எண்ணிக்கையைத் தாண்டியது.

தீவிரத் தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 214 ஆக உள்ளன, அதே நேரத்தில் நோய்க்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்டப் பாதிப்பை 13,157 பேரும் மற்றும் லேசான அறிகுறி கொண்டா இரண்டாம் கட்டப் பாதிப்பை 20,035 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள 214 தொற்றுகளில் 60 பேர் அல்லது 28.04 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் ஆவர். மேலும் 101 பேர் அல்லது 47.20 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர். 53 பேர் அல்லது 24.77 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இது தவிர, கடும் பாதிப்புக்குள்ளான நோயாளிகளில் 96 பேர் அல்லது 44.86 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ள வேளையில் 70 பேர் அல்லது 32.71 விழுக்காட்டினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் ஒருவர் அல்லது 0.47 விழுக்காடு கர்ப்பிணித் தாய்மாரும் அடங்குவார்.

கட்டம் வாரியாகக் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் கட்டம்: 13,157 சம்பவங்கள் (39.39 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 20,035 சம்பவங்கள் (59.97 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 92 சம்பவங்கள் (0.28 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 69 சம்பவங்கள் (0.20 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 53 சம்பவங்கள் (0.16 விழுக்காடு)


Pengarang :