ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

தினசரி நோய்த்தொற்றுகள் 26,856 சம்பவங்களாகக் குறைந்துவிட்டன, 188 மட்டுமே தீவிரமானது

ஷா ஆலம், மார்ச் 8: தினசரிக் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 27,435 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது நேற்று 26,856 ஆகக் குறைந்துள்ளது.

தீவிரத் தொற்றுகள் அல்லது மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 188 தொற்றுகளுடன் குறைவாகவே இருந்தன, அதே நேரத்தில் அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் 10,160 தொற்றுகள் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டம் 16,508 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ள 188 தொற்றுகளில், மொத்தம் 63 பேர் அல்லது 33.51 விழுக்காட்டினர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள், 80 பேர் அல்லது 42.55 விழுக்காடு இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருப்பவர்கள் மற்றும் 45 பேர் அல்லது 23.94 விழுக்காட்டினர்  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்கள்.

கூடுதலாக, 103 பேர் அல்லது 54.79 விழுக்காட்டினர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகள், 83 பேர் 44.15 விழுக்காட்டினர் ஒன்றுக்கும் அதிகமான நோய் உள்ளவர்கள் மற்றும் ஒருவர் கர்ப்பிணிப் பெண்.

கட்டம் வாரியாகக் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் கட்டம்: 10,160 சம்பவங்கள் (37.83 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 16,508 சம்பவங்கள் (61.47 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 81 சம்பவங்கள் (0.30 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 57 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 50 சம்பவங்கள் (0.19 விழுக்காடு)

நேற்றைய நிலவரப்படி மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 3,649,463 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“நேற்று பதிவு செய்யப்பட்ட குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,726 பேர், மொத்தக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,311,854.

“அது தவிர, திங்களன்று கோவிட் -19 காரணமாக மொத்தம் 77 புதிய இறப்புகள். அந்த எண்ணிக்கையில், மொத்தம் 26 இறப்புகள் மருத்துவமனைக்கு வெளியே நிகழ்ந்தன,” என்று அவர் கூறினார்


Pengarang :