ECONOMYPBTSELANGOR

பெட்டாலிங் மாவட்டத்தில் வெள்ள உதவி நிதி பெற 22,000 பேர் தகுதி

ஷா ஆலம், மார்ச் 10– பெட்டாலிங் மாவட்டத்தில் 22,000 பேர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவி நிதி பெறத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட நில அலுவலகம் கூறியது.

அந்த 22,000 பேரில் 500 பேர் மட்டுமே இன்னும் உதவித் தொகையைப் பெறவில்லை என்று மாவட்ட அதிகாரி முகமது ஜூஸ்னி ஹஷிம் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த 500 பேரும் பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்திற்கு நேரில் வந்து உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் சொன்னார்.

சிறிய எண்ணிக்கையிலானோர் அதாவது 500 பேர் மட்டுமே நிதி ஒப்படைப்பு நிகழ்வுக்கு வரத் தவறிவிட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி வழங்கும் நிகழ்வு பெரிய அளவில் நடத்தப்பட்டது. இது தவிரப் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளிலும் நிதியை  ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நிதி வழங்கும் பணி வெகு விரைவில் முடிவுக்கு வரும் எனத்  தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்தாண்டு  டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தைத் தொடக்கியது.

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்குத் தலா 10,000 வெள்ளியும் வழங்கப்பட்டது.


Pengarang :