ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இளம்  வாக்காளர்களின் ஒட்டுகள் யாருக்கு? கணிக்க முடியாத மில்லியன் ரிங்கிட் கேள்வியா?

ஷா ஆலம், மார்ச் 10- ஜோகூர் மாநிலத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதற்கான  அறிகுறியை  முதல் முறையாக தங்களின் ஜனநாயக கடைமையை நிறைவேற்றவிருக்கும் பெரும்பாலான இளம் வக்காளர்கள் இன்னும் காட்டாதிருப்பது  கெஅடிலான் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் புரியாத புதிராக உள்ளது.

மாநிலத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் இளம் வாக்காளர்களின் மௌனம் பெரும் சவாலாக உள்ளதோடு அவர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தார் முகமது அகின் கூறினார்.

புதிய வாக்காளர்கள் மற்றும் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யாமல் மதில் மேல் பூனைகளாக இருப்போரை இலக்காக கொண்டு கெஅடிலான் தேர்தல் இயந்திரம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஹாங் துவா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு ரெங்கிட் சட்டமன்றத் தொகுதியைக் கூறலாம். இத்தொகுதியில் நாம் தோற்றோம். இங்கு தேசிய முன்னணி டத்தோ முகமது புவாட் ஸர்க்காசியை நிறுத்தியப் பின்னர் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதோடு இளம்  வாக்காளர்கள் நமது வேட்பாளருக்கு ( கைருடின் ஏ ரஹிம்) ஆதரவளிக்கத் தொடங்கி விட்டனர் என்றார் அவர்.

இதுவரை 20 தொகுதிகளில் கள நிலவரங்கள் நமக்கு சாதகமாக உள்ளன. கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் காரணமாக தொலைபேசி வழி வாக்காளர்களை தொடர்பு கொள்வது உள்பட பல்வேறு பிரசார முறைகளை நாம் கையாள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் போட்டியிடும 16 தொகுதிகளில் பெரும்பாலனவற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறிய அமானா கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் அமினுஹூடா ஹசான், பிரசார கெடுபிடிகள் தவிர்த்து புதிய வாக்காளர்களின் மனநிலை தங்களுக்கு பெரும் சவாலாக உள்ளதாக சொன்னார்.


Pengarang :