ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் இளைஞர் இயக்கம் உணவு விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 11 – சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குண்டாங்கில் உள்ள கம்போங் பெர்மாத்தா மற்றும் குவாங்கில் உள்ள கம்போங் கோம்பாக் வாசிகளுக்குச் சிலாங்கூர் இளைஞர் இயக்கம் (பிஇபிஎஸ்) 950 உணவுப் பொதிகளை வழங்கியது.

திங்கள்கிழமை மாலை தண்ணீரில் வீடுகள் மூழ்கியதால் பாதிக்கப் பட்டவர்களின் சுமையைக் குறைக்க இதனை மேற்கொள்வதாக “டாபூர் சிலாங்கூர் பங்கிட் உதவி திட்ட” தலைவர் அக்மல் ஹலிம் கூறினார்.

“டேவான் ஜே.கே.கே.கே கம்போங் பெர்மாத்தாவில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கும், பின்னர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியவர்களுக்கும் உணவு விநியோகம் செய்யப ்பட்டது.

“பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்வதில் களைப்படைந்து சோர்வாகியுள்ளனர்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சுமார் 300 தொண்டூழியர்களை கொண்டுள்ள PeBS வெள்ளம் போன்ற இடர்கள் ஏற்பட்டால் பொது மக்களுக்கு உதவ இவ்வியக்கம் அமைக்கப் பட்டதாகவும்
“ஒவ்வொரு மாநிலத் தொகுதியிலும் தங்கள் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் பேரிடர்கள் மீண்டும் நடந்தால், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்வது உட்பட அவர்களுக்கு உதவ தாங்கள் தயார் என்று அவர் கூறினார்.


Pengarang :