ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

தினசரிக் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை 32,800 சம்பவங்களாக உயர்ந்துள்ளன

ஷா ஆலம், மார்ச் 12: தினசரிக் கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 2,013 அதிகரித்து 32,800 சம்பவங்களாக உள்ளதுமொத்தத்தில், 32,259 உள்ளூர் சம்பவங்கள், 541 இறக்குமதி சம்பவங்கள்.

பிப்ரவரி 24 அன்று அதிகபட்சமாகத் தினசரி 32,070 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டங்களுக்கான நோய்த்தொற்றின் சம்பவங்கள் 183 பேர் அல்லது 0.56 விழுக்காடு குறைவாகவே இருந்தன.

பின்வருபவை நோயாளிகளின் கட்டம் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1 ஆம் கட்டம்: 12, 726 சம்பவங்கள் (38.80 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 19,891 சம்பவங்கள் (60.64 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 70 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

4 ஆம் கட்டம்:78 சம்பவங்கள் (0.24 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 35 சம்பவங்கள் (0.11 விழுக்காடு)

மொத்தம் 8,858 பேர் அல்லது 2.7 விழுக்காடு நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 149 பேருக்குச் சுவாச உதவி தேவையில்லை என்றும் 231 பேருக்குச் சுவாச உதவி தேவை என்றும் சுகாதாரப் பணிப்பாளர் பிரிவு தெரிவித்ததுது

நேற்று நிலவரப்படி, 310,351 பேர் அல்லது 96.2 விழுக்காடு கோவிட்-19 நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் 3,111 பேர் அல்லது ஒரு விழுக்காடு நோயாளிகள் கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (பிகேஆர்சி) சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

சமீபத்திய செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை 8,280 ஆக உள்ளது, மொத்தச் சம்பவங்களின் எண்ணிக்கை 322,700 ஆக உள்ளதுஎன்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு வெளியே 21 இறப்புகள் உட்பட நேற்று மொத்தம் 97 இறப்புகள் பதிவாகியுள்ளன, நேற்று வரை மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 33,643 ஆக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 3,774,786 சம்பவங்கள்.


Pengarang :