ALAM SEKITAR & CUACAHEALTHNATIONALPBT

பருவமழையின் மாற்றத்தினால் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்

ஷா ஆலம், மார்ச் 12: பருவமழையின் மாற்றத்தினால் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அறிவுறுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் மெட்மலேசியா ஒரு அறிக்கையில், பருவமழையின் நிலைமாற்றம் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி 2022 மே நடுப்பகுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப் படுவதாக அறிவித்துள்ளது.

“இந்தக் கட்டத்தின் ஆரம்பம் நவம்பர் 3, 2021 அன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் முடிவைக் குறிக்கிறது.

“மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

நேற்று ஒரு அறிக்கையில், மெட்மலேசியா, பருவமழையின் மாற்றத்தினால், இடியுடன் கூடிய மழைக்கு மிகவும் பொருத்தமான பல்வேறு திசைகளிலிருந்து பலவீனமான காற்றைப் பெறும், இது பொதுவாகக் குறுகிய காலத்தில் பலத்த மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவருகிறது.

மெட்மலேசியா  அறிக்கையின்படி, இந்தச் சம்பவம் முக்கியமாக மேற்கு கடற்கரை மற்றும் தீபகற்பத்தின் உள் மாநிலங்கள், மேற்கு சபா , மேற்கு மற்றும் மத்தியச் சரவாக்கின் பெரும்பாலான பகுதிகளில் மாலை மற்றும் அதிகாலையில் நிகழகூடும் என அறிவித்துள்ளது.

வானிலை நிலைமைகள் திடீர் வெள்ளம் மற்றும் பாதுகாப்பற்ற கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் சாத்தியம் இருப்பதாக அவர் கூறினார்.


Pengarang :