ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வாக்குச் சாவடிக்கு வந்த பெண்மணிக்கு அபராதம்

ஜோகூர் பாரு, மார்ச் 12- கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும் வாக்களிப்பதற்காக கம்போங் மேலாயு மண்டபத்திலுள்ள வாக்குச் சாவடிக்கு வந்த பெண்மணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த பெண்மணி இரண்டாம் கட்ட நோய்த் தொற்று பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜோகூர் மாநில சுகாதாரத் துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர்  அமான் ராபு கூறினார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாக்குச் சாவடிக்கு வந்த அந்த பெண்ணுக்கு மாநில சுகாதார அதிகாரிகள் காலை 11.45 மணியளவில் குற்றப்பதிவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் தேர்தலில் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு மாநில சுகாதாரத் துறை கடப்பாடு கொண்டுள்ளது. நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மீறி வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.


Pengarang :