ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட் 19 – முந்தைய நாளுடன் ஒப்பிடும் பொழுது 6,550 தொற்றுகள் குறைந்துள்ளது

ஷா ஆலம், மார்ச் 13: தினசரி கோவிட்-19 நோய்த்தொற்றில் மொத்தம் 26,250 நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது, நேற்றை எண்ணிக்கையை ஒப்பிடும்போது 6,550 தொற்றுகள் குறைந்துள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.

அதில், தீவிரமான தாக்கம் 177 அல்லது 0.67 சதவீதம் மட்டுமே உள்ளன, அதே நேரத்தில் பிரிவு ஒன்றில் (அறிகுறியின்றி) மற்றும் இரண்டு (லேசான அறிகுறிகள்) 26,073 அல்லது 99.33 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“நேற்று பதிவான 177 வகை 3, 4 மற்றும் 5 தொற்று பிரிவுகளில், 43 தொற்றுகள் அல்லது 24.39 சதவீதம் தடுப்பூசி போடப்படாத நபர்களை உள்ளடக்கியது.

“மொத்தம் 91 தொற்றுகள் அல்லது 51.41 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்கள் ஆனால் பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் மற்றும் 43 தொற்றுகள் அல்லது 24.29 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் பெற்ற நபர்கள்.

“99 தொற்றுகள் அல்லது 55.93 சதவீதம் பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நோயாளிகள், 1.13 சதவீதம் பேர் கர்ப்பிணித் தாய்மார்கள்” என்று அவர் கூறினார்.

பின்வருபவை நோயாளிகளின் வகையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன:

வகை 1: 8,652 தொற்றுகள் (32.96 சதவீதம்)
வகை 2: 17,421 தொற்றுகள் (66.37 சதவீதம்)
வகை 3: 70 தொற்றுகள் (0.26 சதவீதம்)
வகை 4: 60 தொற்றுகள் (0.23 சதவீதம்)
வகை 5: 47 தொற்றுகள் (0.18 சதவீதம்)

மருத்துவமனையில் இருந்து 23 இறப்புகள் உட்பட மொத்தம் 77 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, மொத்தத் தொற்றுகளின் எண்ணிக்கை 33,720 ஆக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி மொத்தத் தொற்றுகளின் எண்ணிக்கை 3,801,036 வழக்குகள், அதே நேரத்தில் 3,443,532 நோயாளிகள் நேற்று 25,089 வழக்குகள் உட்படக் குணமடைந்துள்ளனர்.


Pengarang :