ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மக்களின் சுமையை குறைப்பதில் மலிவு விலைத் திட்டம் உதவி- மந்திரி புசார்

கோம்பாக், மார்ச் 13-  மாநில அரசின் பரிவுமிக்க வணிக  திட்டத்தில்  சந்தையை விட குறைவான விலையில் பொது மக்கள் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விற்கப்படும் பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் மலிவானதாக இருந்தாலும் இதர சந்தைகளுடன் ஒப்பிடுகையில் அதன் தரம் ஒருபோதும் குறைவாக இருந்ததில்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கட்டுபடி விலையில் கோழி, முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்கப்படுகின்றன என்றார் அவர்.

சந்தையை விட மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை பொதுமக்கள் இத்திட்டத்தின் வழி பெறுகின்றனர். விலை மலிவாக இருந்தாலும் அதன் தரத்தில் எந்த குறைபாடும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுங்கை துவா சட்டமன்ற தொகுதி நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்த விற்பனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த திட்டத்தை அமல்படுத்தும் எட்டாவது இடமாக சுங்கை துவா விளங்குகிறது என்றார்.

பொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் மாநிலத்தின் 64 பகுதிகளில் இந்த விற்பனை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாண்டு நோன்பு பெருநாள் வரை  இந்த திட்டம் அமலில் இருக்கும்.


Pengarang :