ECONOMYMEDIA STATEMENTPBT

மாநில அரசின் பரிவுமிக்க வணிக  திட்டம்  மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது, பிப்ரவரியில் இருந்து கிட்டத்தட்ட RM200,000 சம்பாதித்தது

கோம்பாக், மார்ச்14: மாநில சட்டமன்ற  சேவை மையத்தின் துணையுடன் மாநில அரசின் பரிவுமிக்க வணிக  திட்டம் பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்டதில் இருந்து மொத்த விற்பனை RM180,000 ஐ பதிவு செய்ய முடிந்தது.

டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், ஒவ்வொரு பகுதியிலும் குடியிருப்பார்களிடமிருந்து கோழி, முட்டை, மீன் மற்றும் இறைச்சி விற்பனைக்கு ஊக்கமளிக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

“உதாரணமாக, சில நேரங்களில் ஒரே இடத்தில் 800 கோழிகள் வரை விற்கப்படுகின்றன, இதனால் மொத்த கோழிகளின் எண்ணிக்கை 6,000 வரை விற்கப்படுகிறது.

“நாங்கள் ஒரு குடும்பத்திற்கு இரண்டு கோழிகள் வரை வரம்பிடுகிறோம், எனவே இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே 3,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

நேற்று சுங்கை துவா தொகுதியில் விற்பனைத் திட்டத்தை மதிப்பாய்வு செய்த பின்னர், “இந்தத் திட்டம் அதிக மாநிலத் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும் குடியிருப்பாளர்களின் முன்னணி தேர்வாக விளங்கும் என்பதால், இந்த எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அமிருடின் மற்றும் அவரது மனைவி, டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமது, கோம்பாக்கின் தாமான் கோம்பாக் பெர்மையில் உள்ள ஒரு மையத்தில்  மாநில அரசின் பரிவுமிக்க வணிக  திட்டத்தை பார்வையிட்டனர். அவர்களது வருகையை சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராசி வரவேற்றார்.

அமிருடின் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட நான்கு பொருட்களைத் தவிர, எண்ணெய், வெங்காயம் மற்றும் அரிசி போன்ற பல அத்தியாவசிய பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

“இந்த திட்டம் தற்காலிகமானது மற்றும் எல்லா நேரத்திலும் இல்லாவிட்டாலும், இது வாங்குபவர்களின் தாக்கத்தை குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் பல நன்மைகள் இருப்பதால் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து மக்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 64 பகுதிகளில் ஒவ்வொரு வார இறுதியிலும் இத்திட்டம், செயல் பாடு ஹரி ராயா வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் போது மொத்தம் 10,000 கோழிகள், 3,100 கிலோ புதிய மாட்டு இறைச்சி, 6,200 கிலோ கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மீன்கள் மற்றும் 315,000 தர பி முட்டைகளும் விற்பனை செய்யப்பட்டன.


Pengarang :