ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பாத்தாங் காலி தொகுதியில் ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் ஏப்ரல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், மார்ச் 15: ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் பாத்தாங் காலி சட்டமன்றத்தைச் சுற்றியுள்ள சமூகத்தினர் வரும் ஏப்ரல் 14 வரை விண்ணப்பிக்கலாம்.

மாதம் 2,000 ரிங்கிட்டுக்கு மிகாமல் வருமானம் உள்ள குடும்பத் தலைவர்களுக்கு ரிம100 மதிப்புள்ள மொத்தம் 450 ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாக ஒருங்கிணைப்பு அதிகாரி சைபுடின் ஷாபி முகமது தெரிவித்தார்.

இந்த விண்ணப்பம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மட்டுமே (B40), சிலாங்கூர் மாநிலப் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம் (கிஸ்) மற்றும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டம் (எஸ்.எம்.யு.இ.) ஆகியவற்றைப் பெறுபவர்கள் விண்ணப்பம் செய்யத் தகுதியற்றவர்கள்.

“பாத்தாங் காலியில் பல B40 குடும்பங்கள் இருப்பதால், இந்தப் பற்றுச் சீட்டைப் பெற உண்மையிலேயே தகுதியானவர்களைக் கண்டறியக் கிராமத் தலைவர்கள், குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

தகுதியான பெறுநர்கள் அறிவிக்கப்படும் தேதியில் பாத்தாங் காலி எகோன்சேவ் பேரங்காடியில் தேவையான பொருட்களை வாங்கலாம் என்று அவர் விளக்கினார்.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நீண்ட கால முயற்சியாக B40 குழுவைக் குறிவைத்து ஜோம் ஷாப்பிங் ராயா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிலாங்கூரில் உள்ள மக்களின் சமய விழாக்களுக்கு ஏற்ப இதுபோன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.


Pengarang :