ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 குணப்படுத்துதல் நேற்று புதிய தொற்றையை விட அதிகமானது

 

 

கோலாலம்பூர், மார்ச் 16: கோவிட்-19 குணமடைந்தவர்கள் தினசரி எண்ணிக்கை 31,234 ஆகப் பதிவாகியுள்ளது. நேற்று 26,534 ஆக இருந்த புதிய சம்பவங்களைத் தாண்டியுள்ளதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நேற்று பதிவு செய்யப்பட்ட மொத்த 26,534 கோவிட்-19 தொற்று சம்பவங்களில் 99.34 விழுக்காட்டினர் அல்லது 26,538 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று டாக்டர் நோர் ஹிஷாம் கருத்து தெரிவித்தார்.

மொத்தம் 10,516  பேர் அல்லது 39.63 விழுக்காட்டினர் நேற்று பதிவு செய்யப்பட்ட கோவிட் -19 சம்பவங்களில் ஒன்றாம் கட்டத்திலும், 15,842 பேர் அல்லது 59.71 விழுக்காட்டினர் இரண்டாம் கட்டத்திலும் உள்ளனர், ”என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று மொத்தம் 176 பேர் அல்லது 0.66 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் இருப்பதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

மூன்று மற்றும் நான்காம் கட்டங்களில் முறையே மொத்தம் 65 பேர் அல்லது 0.24 விழுக்காடு, ஐந்தாம் கட்டதில் 46 பேர் அல்லது 0.18 விழுக்காடு என்று அவர் கூறினார்.

நேற்று நாடு முழுவதும் பதிவான தொற்று விகிதம் (Rt) 0.95 ஆக இருந்தது, திங்களன்று 0.96 ஆக இருந்தது.

கோவிட்-19 குறைந்த ஆபத்துள்ள தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (பிகேஆர்சி) படுக்கை உபயோகத்தின் விழுக்காட்டைப் பற்றி குறிப்பிடுகையில், எந்த மாநிலத்திலும் 50 விழுக்காட்டுக்கு மேல் இல்லை என்றார்.

முக்கியமான சம்பவப் படுக்கைகள் அல்லது தீவிரச் சிகிச்சை பிரிவு (ICU) ஏழு மாநிலங்கள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பதிவு செய்துள்ளன என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

ஏழு மாநிலங்கள் கோலாலம்பூர் (81 விழுக்காடு), புத்ராஜெயா (67 விழுக்காடு), ஜோகூர் (64 விழுக்காடு), சிலாங்கூர் (60 விழுக்காடு), கிளந்தான் (58 விழுக்காடு), பெர்லிஸ் (55 விழுக்காடு) மற்றும் மலாக்கா (50 விழுக்காடு).


Pengarang :