ECONOMYMEDIA STATEMENTNATIONAL

15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுக்கிறது ஹராப்பான் கூட்டணி

ஷா ஆலம், மார்ச் 17- கூட்டணியில் காணப்படும் பலவீனங்களை களையவும் வரும் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வரையவும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.

கூட்டணியின் போராட்ட சித்தாந்தங்களுக்கு புதுப்பொலிவை ஏற்படுத்தும் முயற்சியாக மாநாடு மற்றும் ஹராப்பான் தலைவர்களின் சந்திப்பு நிகழ்வுகளை  நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஹராப்பான் தலைவர் மன்றம் கூறியது.

தேசிய முன்னணியை ஒன்று திரண்டு நிராகரிப்பதற்கு ஏதுவாக எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கு பேராசை மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் தரப்பினருடன் ஹராப்பான் கூட்டணி வலிமையை வலுப்படுத்தும் என்று அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஹராப்பான் கூட்டணி போட்டியிடும் இடங்களில் எதிர்க்கட்சிகள் போட்டியிடக்கூடாது. இதனால் வாக்குகள் சிதறி தேசிய முன்னணிக்கு மறைமுக வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று அக்கூட்டணி குறிப்பிட்டது.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள  விபரங்கள் வருமாறு-

ஜோகூர் மாநில தேர்தல் மாநில மக்கள் அளித்த தீர்ப்பை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி ஏற்றுக் கொள்கிறது. சொந்த அணியில் இருக்கும் எதிர்க்கட்சிகளே பல முனைப் போட்டியில் குதித்தது, கட்சி சின்னம், குறைவானோர் வாக்களித்தது, நடப்பு நிலவரங்கள் தொடர்பில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தொடர்பு மற்றும் தகவல் அம்சங்களில் காணப்பட்ட பிரச்னைகள் உள்ளிட்ட பலவீனங்களால் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி இத்தேர்தல் 12 இடங்களை மட்டுமே வென்றது.

இந்த பலவீனங்களை களைய பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளையில் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக வியூகங்களையும் வகுக்கும்.  இந்த பலவீனங்களைள ஒரு கட்சியால் மட்டும் களைய முடியாது. இதற்கு ஒன்று பட்டு விரிவான முறையில் தீர்வு காண வேண்டும் என்று அது தெரிவித்தது.


Pengarang :