ECONOMYSELANGORSUKANKINI

பள்ளி உதவி மற்றும் பழுதுபார்ப்புக்கான மாநில அரசின் மானிய உதவி மார்ச் 31 வரை திறந்திருக்கும் – மந்திரி புசார்

ஷா ஆலம், மார்ச் 17: சிலாங்கூர் பள்ளி உதவித் திட்டம் இப்போது முதல்  மார்ச் 31 வரை திறந்திருக்கும் என்று டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்தத் திட்டம் உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பழுதுபார்த்தல் அல்லது புதிய கட்டமைப்புகளைக் கட்டுவதற்குப் பல ஆண்டுகளாக அளித்துவரும் நிதியுதவி தொடரும் என்று கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு, கல்வி கற்றல், கற்பித்தலுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சிக்கு வழங்கி வரும் மானியம் தக்க சான்றாகும். www.ssipr.selangor.gov.my என்ற இணையதளம் மூலம் பள்ளி, அறங்காவலர் குழு மற்றும் பள்ளியின் பெற்றோர் சங்கம் (PIBG) விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று பேஸ்புக்கில் மூலம் அவர் பகிர்ந்துள்ளார்.

பின்வரும் பள்ளிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவை:

– மக்கள் மதப் பள்ளி / ஒருங்கிணைப்பு மதப் பள்ளி (சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையில் பதிவு செய்யப்பட்டது)
– மஹாட் ஒருங்கிணைப்பு தஹ்ஃபிஸ் அறிவியல்
– சீனத் தேசிய வகை பள்ளி (SJKC)
– தமிழ் தேசிய வகை பள்ளிகள் (SJKT)
– தனியார் மேல்நிலை பள்ளிகள் உட்படத் தேசிய வகை இடைநிலை பள்ளிகள் (SMJK).
– முபாலிக் பள்ளி


Pengarang :