Kakitangan KDEB Waste Management (KDEBWM) melakukan kerja pembersihan di kawasan premis. Foto Facebook KDEBWM
ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வடிகால் அடைப்பைச் சுத்தம் செய்யும் நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 20: தாமான் சிராஸ் இண்டாவில் வெள்ள அபாயத்தைக் குறைக்கக் கேடிஇபி கழிவு மேலாண்மை வடிகால் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கிறது.

பேஸ்புக்கில் கேடிஇபி கழிவு மேலாண்மை சிராஸ் இண்டா ஜாலான்  பூங்காவின் இண்டா 19 இல் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் அம்பாங் ஜெயா நகராச்சியை சேர்ந்த ஏஜென்சியின் ஏழு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

” கேடிஇபி கழிவு மேலாண்மை அம்பாங் ஜெயா பணியாளர்களும் ‘உயர் அழுத்த ஜெனரேட்டரை’ பயன்படுத்திச் சுத்தம் செய்யும் பணியானது, அப்பகுதியில் உள்ள வடிகால்கள் நல்ல நிலையில் இருப்பதையும், அடைப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் வெள்ள அபாயம் குறைக்கிறது,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் வீட்டுக் கழிவு சேகரிப்பு மற்றும் பொதுச் சுத்தம் செய்வது குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், 1-800-88-2824 என்ற எண்ணில் கேடிஇபி கழிவு மேலாண்மை கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை அழைக்கலாம் அல்லது பிளே ஸ்டோரிலோ கூகுள் பிளேயில் iClean Selangor செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.


Pengarang :