ECONOMYNATIONALSELANGORWANITA & KEBAJIKAN

பொது முடக்க காலத்தில் மகளிர் வருமானம் ஈட்ட சமையல், கைவினைப் பயிற்சிகள் உதவி

ஷா ஆலம், மார்ச் 21 – மகளிர் கூடுதல் வருமானம் பெற உதவுவதற்காக கோத்தா அங்கிரிக் தொகுதி சேவை மையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த ஈராண்டுகளாக  மகளிர் ஆக்கத் திறன் மையத்துடன் (பி.டபள்யு.பி.) இணைந்து மகளிருக்கான பல்வேறு திட்டங்களை தாங்கள் மேற்கொண்டு வருவதாக தொகுதி உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

நாங்கள் மேற்கொண்ட திட்டங்களில் சமையல் வகுப்பு, கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சியும் அடங்கும். இந்தப் பயிற்சிகளில் இல்லத்தரசிகள், பட்டதாரிகள், தனித்து வாழும் தாய்மார்கள் உள்பட 150 பேர் பங்கேற்றனர் என்றார் அவர்.

ஒரு பொருளைத் தயாரிப்பதற்குரிய அறிவாற்றலை அவர்களுக்கு வழங்குகிறோம். பின்னர் அப்பொருளை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தாங்கள் தயாரிக்கும் பொருள்களை இணையம் வாயிலாக விற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு இலக்கவியல் தொடர்பான விஷயங்களும் போதிக்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள கிளப் ஷா ஆலமில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

150 மகளிர் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், புக்கிட்மெலாவதி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்கிஃப்லி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.


Pengarang :