ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் கடந்த மாதங்களின் நிலையிலிருந்து தினசரி தொற்றுகள் எண்ணிக்கை குறைந்தது

ஷா ஆலம், மார்ச் 21: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 20,000 க்கும் அதிகமான சம்பவங்களை கொண்டிருந்த நிலையில் நேற்று கோவிட் -19 நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 19,105 ஆகக் குறைந்தது.

அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் கட்டம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டம் 18,912 தொற்றுகள் அல்லது 98.99 விழுக்காடு என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் விளக்கினார்.

“பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில், 193 தொற்றுகள் அல்லது 1.01 விழுக்காட்டினர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் உள்ளனர் ” என்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பதிவான சம்பவங்களின் எண்ணிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:

1 ஆம் கட்டம்: 8,267 சம்பவங்கள் (43.27 விழுக்காடு)
2 ஆம் கட்டம்: 10,645 சம்பவங்கள் (55.72 விழுக்காடு)
3 ஆம் கட்டம்: 81 சம்பவங்கள் (0.42 விழுக்காடு)
4 ஆம் கட்டம்: 44 சம்பவங்கள் (0.23 விழுக்காடு)
5 ஆம் கட்டம்: 68 சம்பவங்கள் (0.36 விழுக்காடு)

நாட்டில் மொத்தம் 3,993,124 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Pengarang :