ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றால் நாட்டில் 40 லட்சம் பேர் பாதிப்பு -இன்று 17,828 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், மார்ச் 22 – நாட்டில் கோவிட்-19 நோய் அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்நோய்த்  தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மேலும் 17,828  பேர் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்..

புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்கள் எண்ணிக்கை  40 லட்சத்து 10 ஆயிரத்து 952 ஆகப் பதிவாகியுள்ளது.

நேற்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 99.12 விழுக்காட்டினர் அல்லது 17, 672 பேர் நோய்க்கான அறிகுறி இல்லாத ஒன்றாம் கட்ட மற்றும் லேசான அறிகுறி கொண்ட இரண்டாம் கட்டப் பாதிப்பை கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய 0.88 விழுக்காட்டினர் அல்லது 156 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள் பின்வருமாறு:

• முதல் கட்டம்- 9,121 சம்பவங்கள் (51.16  விழுக்காடு)

• இரண்டாம் கட்டம்- : 8,551 சம்பவங்கள் (47.96 விழுக்காடு)

• மூன்றாம் கட்டம்- 55 சம்பவங்கள் (0.31 விழுக்காடு)

• நான்காம் கட்டம் –  48  சம்பவங்கள் (0.27  விழுக்காடு)

• ஐந்தாம் கட்டம்-  53  சம்பவங்கள் (0.30  விழுக்காடு).


Pengarang :