ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணி 80 விழுக்காடு பூர்த்தி

ஷா ஆலம், மார்ச் 23– சிலாங்கூரில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணி 80 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

சுபாங் ஜெயா, பூச்சோங், கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் தெங்கா, கம்போங் சுங்கை பாரு, கம்போங் கெனாங்கான் மற்றும் ஸ்ரீ லங்காஸ் ஆகிய பகுதிகளில் துப்புரவுப் பணி முழுமையாகப் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி இம்மாத இறுதிக்குள் முழுமையாக முற்றுப் பெறும் என நாங்கள் எதிர் பார்க்கிறோம். மறுபடியும் கனமழை மற்றும் வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்க முயன்று வருகிறோம் என்றார் அவர்.

ஸ்ரீ மூடா, தாமான் கின்ராரா, உலு லங்காட், கிள்ளான் ஆகிய பகுதிகளில் கால்வாய்  சம்பந்தப்பட்ட துப்புரவுப் பணி இன்னும் 20 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது என்றார் அவர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி மே மாதம் முழுமையடையும் என கணிக்கப்படுவதாக அந்நிறுவனம் முன்னதாக கூறியிருந்தது.


Pengarang :