ECONOMYSELANGORSUKANKINI

கால்பந்து அடிப்படை பயிற்சியில் பங்கேற்க பூச்சோங் வட்டார இளையோருக்கு அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 23-  கின்ராரா பிகே3  திடலில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கால்பந்து அடிப்படைப் பயிற்சியில் பங்கேற்க பூச்சோங் வட்டார இளைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சியில் 200 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாக கின்ராரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த பயிற்சி இரு பிரிவுகளாக நடத்தப்படும். காலை 9.00 மணி முதல் 10.30  வரை நடைபெறும் முதல் கட்டப் பயிற்சியில் 100 பேருக்கும் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இரண்டாம் கட்டப் பயிற்சியில் 100 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இப்பயிற்சியில் 7 முதல் 17 வயது வரையிலானோர் பங்கேற்கலாம். 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட பங்கேற்பாளர்களின் பெற்றோர்   பெற்றிருக்க வேண்டும் அதே சமயம் 13 வயதுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தடுப்பூசியை முழுமையாக பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என அவர் சொன்னார்.

இப்பயிற்சியில் தங்கள் பிள்ளைகளின் பங்கேற்பை உறுதி செய்ய விரும்பும் பெற்றோர்கள் https://bit.ly/BolaSepakKinrara எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது  013-5303578 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :