ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வீடற்ற முதியவரின் மரணத்திற்கு காரணமான நபருக்கு 18 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர், மார்ச் 24 – நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீடற்ற மூத்த குடிமகனைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்த நபர், அந்த முதியவரின் மரணத்திற்கு காரணமான குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்ட பின்னர், உயர் நீதிமன்றம் இன்று 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

நீதித்துறை ஆணையர் டத்தோ அஸ்லாம் ஜைனுடின், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ்,46 வயதான சூன் வெய் ஹவ்க்கு எதிராக முதன்மையான வழக்கை போலிஸ் தரப்பு நிருபிக்க தவறியதைக் கண்டறிந்ததும், குற்றவியல் சட்டத்தின் 304 (a) இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டார்.

பிரிவு 304 (a) க்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

“எனவே, நீதிமன்றம் குற்றவியல் சட்டத்தின் 304 (a) இன் கீழ் குற்றத்தை திருத்தி மாற்றுக் குற்றச்சாட்டில் தண்டனை வழங்கியது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது, ”என்று அஸ்லாம் வழக்குத் தொடரின் முடிவில் கூறினார்.

அக்டோபர் 31, 2018 அன்று கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனை தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்டோபர் 31, 2018 அன்று இரவு 11.03 மணியளவில் இங்குள்ள ஸத்தாபாக், ஜாலான் கெந்திங் கிள்ளானில் உள்ள ஒரு கடையின் முன் 66 வயதான லீ கிம் கியாட் இறந்ததற்காக சூன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

பிப்ரவரி 24, 2021 முதல் நடந்த வழக்கு விசாரணையின் போது மொத்தம் 14 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர்.


Pengarang :