ECONOMYSELANGORSMART SELANGOR

காகித கூப்பன்களை இனி பயன்படுத்த முடியாது- ஏப்.1 முதல் இலக்கவியல் பார்க்கிங் முறை சிலாங்கூரில் அமல்

ஷா ஆலம், மார்ச் 25– வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி சிலாங்கூர் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களில் இலக்கவியல் கார் நிறுத்தக் கட்டண முறை (இ-கூப்பன்) அமல்படுத்தப்படவுள்ளது.

கார் நிறுத்தக் கட்டணங்களை எளிதாக செலுத்துவதற்கு எதுவாக எஸ்.எஸ்.பி. எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங்  செயலியை தங்கள் கைப்பேசிகளில் விரைந்து பதிவிறக்கம் செய்யும்படி மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஸ்மார்ட் சிலாங்கூர் செயலியை விரைந்து பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த முறை எளிதானது, விரைவானது மற்றும் பாதுகாப்பானது என்று இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் சிலாங்கூர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

இந்த எஸ்.எஸ்.பி. செயலியை கூகுள் பிளேஸ்டோர், ஏப்ஸ்டோர் மற்றும் ஹூவாய் ஸ்டோர் தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

காகித வடிவிலான கார் நிறுத்துமிடக் கூப்பன்களின் பயன்பாடு வரும் ஏப்ரல் முதல் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மாநில அரசு முன்னதாக கூறியிருந்தது.

பொதுமக்கள் தங்கள் வசமுள்ள இன்னும் பயன்படுத்தாத காகித கூப்பன்களை கொடுத்து ரொக்கத் தொகையை இம்மாதம் 23 ஆம் தேதிக்கு பிறகு மாற்றக் கொள்ளலாம் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

எனினும், அதற்கு முன்னதாக அவர்கள் எஸ்.எஸ்.பி. செயலியை பதிவிறக்கம் செய்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


Pengarang :