ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ள நிவாரணம், மாநில வீட்டுக் கடன்கள் RM16 கோடி கூடுதல் செலவை அங்கீகரித்தது சட்டமன்றம்.

ஷா ஆலம் – சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் மார்ச் 18 அன்று மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு 2022 ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை நிறைவேற்றியது. மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவைப் பெற்றதையடுத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

குறிப்பிட்ட சில துறைகளுக்கான பற்றாக்குறையை ஈடுகட்டத் தற்போதைய நிதித் தேவைகளின் அடிப்படையில் , பற்றாக்குறையை ஈடுகட்ட முதல் கூடுதல் வழங்கல் சட்டமாக RM16 கோடி கூடுதல் தேவை இருக்கிறது என்றார் மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி.

“கூடுதல் ஒதுக்கீடு பின்வருமாறு, அதாவது பந்துவான் பாங்கிட் சிலாங்கூர் (பிஎஸ்பி) வெள்ள துயர்துடைப்பு நிதி செலவுகளை ஈடுகட்ட RM15 கோடி தேவைப்படுகிறது மற்றும் சிலாங்கூர் மாநில வீட்டுக் கடன் நிதி உச்சவரம்பு உயர்வுக்கு RM1 கோடி தேவைப ்படுகிறது,” என்று அவர் கூறினார்.

கூடுதல் ஒதுக்கீட்டின் நோக்கம் , RM 15 கோடியில் பெரும் பகுதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் அது தொடர்பான செலவுகளை ஈடுகட்ட தேவைப் படுகிறது என்று அவர் விளக்கினார்.

மேற்கண்ட ஒதுக்கீடு 118,000 குடும்பங்களின் துயர்துடைக்கப்பட உதவியுள்ளது. இருப்பினும், மேலும் 8,000 குடும்பங்கள் உதவி நாடி உள்ளன, எனவே அதிகபட்சமாக 124,000 பேர் பங்கிட் சிலாங்கூர் உதவியைப் பெறுபவர்கள்.

துயர்துடைப்பு மையங்களுக்கு வெளியில் தங்கிய மக்களுக்கும் உதவி வழங்கும் வண்ணம் அவர்களின் கோரிக்கை மனுக்களும் சரிபார்க்கப்படுகிறது. அதற்கு இன்னும் 1,50,000 வரை ஒதுக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

“மார்ச் 31 க்குள், இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவுள்ளதாக, அவர் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள அரசு ஊழியர்கள் வீடுகளைச் சொந்தமாக்குவதற்கு மாநில வீட்டுக் கடன் நிதிக்காகக் கூடுதலாக RM1 கோடி உள்ளடக்கியதாக அமிருடின் கூறினார்


Pengarang :