Datuk Bandar Petaling Jaya, Mohamad Azhan Md Amir berucap ketika majlis Perasmian Pasar PJ@Kita Sri Damansara, Petaling Jaya pada 25 Mac 2022. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

எம்பிபிஜே நிலையான மேம்பாட்டில் கவனம் செலுத்தும்

டாமன்சரா, மார்ச் 26: பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றம் (எம்பிபிஜே) நிலையான எதிர்கால மேம்பாட்டுக்கும் மக்கள் நல்வாழ்வுக்கும் உகந்த 10 செயல் திட்டங்களுக்குத் திட்டமிடுகிறது.

பெட்டாலிங் ஜெயா ஸ்மார்ட், நிலையான மற்றும் நெகிழ்ச்சியான 2030 (PJSSR2030) கோட்பாடு மூலம் நீண்ட கால நடவடிக்கைகள் நகர்ப்புற ஏழைகள், தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் கவனம் செலுத்துவதாக டத்தோ பண்டார் முகமது அஸ்ஹான் முகமது அமீர் கூறினார்.

தெளிவாக, அதன் குறி புத்திசாலி நகர்வுகளை உள்ளடக்கிய அபிவிருத்தி, குறைந்த கார்பன் நகரங்கள், குழந்தைகளுக்கு ஏற்ற வாழ்வு சூழல்கள் மற்றும் கற்றறிந்த மக்கள் வாழும் அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

பொருளாதாரச் வளர்ச்சி நகரம், பொருளாதார சுழற்சி நகரம் , 5.0 சமூக நகரம் , பாதுகாப்பான மற்றும் நெகிழ்ச்சியான நகர அம்சங்களைக் கொண்டு சதூரிய நிர்வாக நகராக உருவாக்குவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

“பொருளாதாரத் துறையைப் பொறுத்தவரை, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் முதலீடுகளை ஊக்குவிப்பதும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாத் துறையைக் கவருவதாகும். அவ் விழாவுக்கு டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.

Pasar PJKita@Sri Damansara என்பது மாற்றுத்திறனாளிகள் (OKU) உட்பட நவீன, விரிவான மற்றும் மக்கள்தொகைக்கு ஏற்ற கருத்தாக்கத்தை முன்னிலைப்படுத்தும் மாவட்டத்தின் முதல் பொதுச் சந்தையாகும்.

 


Pengarang :