ECONOMYMEDIA STATEMENTPBT

இந்த வாரம் பெட்டாலிங் மற்றும் கிள்ளானில் மலிவான விற்பனைத் திட்டம் தொடர்கிறது

ஷா ஆலம், மார்ச் 26: அடிப்படைத் தேவைகளை குறைந்த விலையில் வழங்கும் ஏசான் தலையீடு திட்டம் கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் இன்றும் நாளையும் தொடரும்.

இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எம்பிகேகே பண்டமாரன் ஜெயா, போர்ட் கிள்ளான் சமுதாய கூடம் மற்றும் பாங்சபுரி ரெபானா, பண்டார் புக்கிட் ராஜா ஆகிய இடங்களில் இன்று பாடாங் பாங்சாபுரி ஸ்ரீ பெரண்டாவ், போர்ட் கிள்ளான் மற்றும் பிளாட் ஸ்ரீ செமெண்தாவில் நடைபெறும் சந்தையில் கலந்துகொள்ளுமாறு டத்தோ மந்திரி புசார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் பகிர்ந்த சுவரொட்டியின் அடிப்படையில், மக்கள் ஒரு கிலோ கோழியை RM12, முட்டை ஒரு தட்டு(RM10), புதிய மாட்டு இறைச்சி (RM35/kg), கானாங்கெளுத்தி, செலாயாங் மீன்(RM8/kg) மற்றும் பாக்கெட் சமையல் எண்ணெய் (RM2) ஆகியவற்றை வாங்கலாம்.

பிப்ரவரி 27 அன்று, மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தின் மூலம் ஹரி ராயா பெருநாள் வரை கோழி, முட்டை, மாட்டு இறைச்சி மற்றும் மீன் ஆகிய நான்கு அன்றாடத் தேவைகளை மலிவான விலையில் விற்க மாநில அரசு முடிவு செய்தது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் வழக்கமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி தொடக்கத்தில் டத்தோ மந்திரி புசார் அறிமுகப்படுத்திய ஏசான் உணவு விலை தலையீட்டுத் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.

இந்த நோக்கத்திற்காக மொத்தம் 62 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதாவது சிலாங்கூர் வேளாண் சந்தையின் கீழ் 24 இடங்கள், மற்றவை பிகேபிஎஸ் இன் கீழ் உள்ளன.


Pengarang :