ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

இ-கூப்பன் கட்டண முறை ஏப்ரல் 1 முதல் தொடங்குகின்றன,

ஷா ஆலம், மார்ச் 26: ஏப்ரல் 1 முதல் முழு டிஜிட்டல் கட்டணத்தை (இ-கூப்பன்) எளிதாக்குவதற்கு ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (எஸ்எஸ்பி) விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள்.

எஸ்எஸ்பி செயலியை Google Playstore, Appstore அல்லது Huawei store இல் பதிவேற்றலாம் செய்யலாம். காகிதக் கூப்பன் வைத்திருப்பவர்கள், கூப்பனின் மீதமுள்ள மதிப்பை இன்று முதல் கிரெடிட்டிற்கு மாற்ற, எஸ்எஸ்பி பயனர்களாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஊராச்சி கழக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த வசூலிப்பு முறை  பின் ஒரு  வாரத்தில் நடைமுறைக்கு வருவதால், இழப்பை எதிர்கொள்பவர்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இதனை  விரைவு  படுத்த முடிவு செய்ததாக இங் ஸீ ஹான் விளக்கினார்.

2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எஸ்எஸ்பி செயலி 1,041,221 கிலோகிராம் காகிதத்தை சேமித்துள்ளது. இன்றுவரை, எஸ்எஸ்பி 1,963,241 பதிவு செய்த பயனர்களைக் கொண்டுள்ளது.


Pengarang :