ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

1.56 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் கோவிட்-19 ஊக்க தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 27: நேற்றுவரை நாட்டிலுள்ள பெரியவர்களில் மொத்தம் 1 கோடியே 56 லட்சத்து 13 ஆயிரத்து 982  பேர் அல்லது  66.4 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 48 ஆயிரத்து 364 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 24 ஆயிரத்து 510 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 48 ஆயிரத்து 270 பேர் அல்லது 91.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், 29 லட்சத்து 45 ஆயிரத்து 627 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

இதற்கிடையில், ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில் மொத்தம் 13 லட்சத்து 5 ஆயிரத்து 766 பேர் அல்லது 36.8 விழுக்காட்டினர் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

மொத்தம் 31,595 தடுப்பூசிகளில், 13,054 முதல் டோஸ்கள், 890 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 17,651 பூஸ்டர் டோஸ்கள் பெற்றனர். தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் கொடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 6 கோடியே  86 லட்சத்து 75 ஆயிரத்து 263 ஆகக் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று கோவிட்-19 காரணமாக 34 இறப்புகள் பதிவாகியுள்ளன.


Pengarang :