ECONOMYSELANGORSMART SELANGOR

காகித கூப்பனுக்கு ஈடான தொகையை இ-கூப்பனுக்கு விரைந்து மாற்றிக் கொள்ளுங்கள் – பொதுமக்களுக்கு வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 28- இன்னும் பயன்படுத்தாமலிருக்கும் காகித வடிவிலான கார் நிறுத்துமிடக் கட்டணங்களுக்கு ஈடானத் தொகையை எஸ்.எஸ்.பி. எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலிக்கு விரைவில் மாற்றிக் கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காகித கூப்பன்களின் மதிப்புத் தொகையை இ-கூப்பன்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு கடந்த 26 ஆம் தேதி முதல் ஐந்து இடங்களில் வழங்கப்படுவதாக எஸ்.எஸ்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வெளியிட்ட கூப்பன்களை  அந்த மாநகர் மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முகப்பிடங்களில் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

அனைத்து ஊராட்சி மன்றங்களின் கூப்பன்களை சுபாங் ஜெயா, எஸ்எஸ் 15 சமூக மண்டபம்,  பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டர், ஷா ஆலம் செக்சன் 11, ஜென்ஜாரோம் எம்.பி.எஸ்.ஏ. மண்டபம் ஆகிய இடங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

இது தவிர லீடிங் இனோவேட்டிவ் டெக்னோலோஜிஸ் அண்ட் சிஸ்டம் சென். பெர்ஹாட் நிறுவன அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி மன்றங்களின் கூப்பன்களையும் மாற்றிக் கொள்ள முடியும் என அது குறிப்பிட்டது.

காகித கூப்பன்களுக்கு ஈடான தொகையை இ-கூப்பன்களுக்கு மாற்றும் நடவடிக்கை மார்ச் 26 முதல் 30 வரை காலை 10.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. இத்தகவலை உங்கள் சகாக்களுக்கு தெரிவியுங்கள் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.

மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் வரும் ஏப்ரல் 1 தேதி தொடங்கி இலக்கிவியல் கார் நிறுத்தக் கட்டண முறை அமல்படுத்தப்படுகிறது.


Pengarang :