MEDIA STATEMENTPBT

கம்போங் துங்கு சட்டமன்றம் ஹரி ராயா பெருநாள் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்குகிறது

ஷா ஆலம், மார்ச் 29: ஏப்ரல் 8 ஆம் தேதி வரை ஜோம் ஷாப்பிங் ராயா திட்டத்தில் பதிவு செய்ய மாநில சட்டமன்ற தொகுதியில் வசிப்பவர்களுக்கு கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜோம் ஷாப்பிங் ராயா திட்டம், கம்போங் துங்குவில் வாழும் RM2,000 க்கு குறைவான குடும்ப வருமானம் கொண்டவர்களுக்கானது என்று பேஸ்புக் மூலம் லிம் யி வேய் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலப் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம் (கிஸ்) மற்றும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டங்களில் (எஸ்.எம்.யு.இ.)  பயன்பெறாதவர்கள் இத்திட்டத்திற்கு  விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பதாரர்கள் அடையாள அட்டை மற்றும் வருமான அத்தாட்சி  சீட்டின் நகலை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

24, ஜாலான் 20/9, தாமான் பராமௌன்ட், பெட்டாலிங்கில் அமைந்துள்ள கம்போங் துங்கு சட்டமன்ற சமூக சேவை மையத்தில் பதிவு செய்யலாம்.


Pengarang :