ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெக்காவானிஸ் அமைப்பு வெ. 95,000 நிதியுதவி

கோம்பாக், மார்ச் 31- கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸியாரா மெடிக் திட்டத்தின் கீழ் மருந்துகள் வாங்குவதற்கு பெக்கவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பு 95,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்திலுள்ள 38 தொகுதிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார். குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக என்று அவர் சொன்னார்.

கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற ஒவ்வொருவருக்கும் தலா 250 வெள்ளி வழங்கப்பட்டதாக  அவர் மேலும் தெரிவித்தார். சுங்கை துவா தொகுதியில் 10 பேருக்கு ஸியாரா மெடிக் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த ஸியாரா மெடிக் திட்டத்திற்காக பெக்காவானிஸ் அமைப்பு கடந்தாண்டு 100,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :