ECONOMYMEDIA STATEMENT

கோம்பாக், கோலாலம்பூர் பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு தண்ணீர் விநியோகம் சீர் படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஷா ஆலம், மார்ச் 31: கோம்பாக் மற்றும் கோலாலம்பூரில் உள்ள 144 பகுதிகளில் நீர் விநியோகத்தை சீரமைக்கும் பணி இன்று மாலை 6 மணிக்கு நிறைவடையும் என பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி தெரிவித்துள்ளது.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் 98 விழுக்காட்டை எட்டியுள்ளது, இன்று மாலை 6 மணிக்கு விநியோகம் முழுமையாக மீட்சிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆயர் சிலாங்கூர், நீர் விநியோகம் உள்ள மற்றும் பெறும் நுகர்வோருக்கு, தினசரி முக்கிய பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்துவதுமாறு கேட்டுக் கொள்கிறது , தண்ணீர் விநியோகம் வழக்க நிலைக்கு முழுமையாக திரும்பும் வரை நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்த விரும்புகிறது.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் முழு மீட்சி அடையும் வரை விநியோகத்தைப் பெற்ற நுகர்வோர் தண்ணீரைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவார்கள் என்று ஆயர் சிலாங்கூர் நம்புகிறது” என்று அவர் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோம்பாக் மற்றும் கோலாலம்பூரில் உள்ள 144 பகுதிகளை பாதித்த வார்தா லாமா, ஜாலான் கூச்சிங் ஆகிய இடங்களில் கசிவு வால்வு பழுதுபார்க்கும் பணி இன்று அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தது என்று முன்னதாக ஆயர் சிலாங்கூர் கூறியது.

ஆயர் சிலாங்கூர் செயலி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல்களையும் பயனர்கள் பார்க்கலாம் அல்லது ஆயர் சிலாங்கூரை 15300 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று அவர் கூறினார்.

ஏதேனும் கேள்விகள் மற்றும் புகார்களை www.airselangor.com என்ற இணையதளத்தில் உள்ள உதவி மையத்திலும் ஆயர் சிலாங்கூர் செயலியிலும் சமர்ப்பிக்கலாம்


Pengarang :