ECONOMYSELANGOR

ஹிஜ்ரா அறவாரியத்தின் வழி கோம்பாக்கில் 92 தொழில்முனைவோர் உருவாக்கம்

கோம்பாக், மார்ச் 31- கடந்த 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஜீரோ டூ ஹீரோ‘ திட்டத்தின் வழி யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் கோம்பாக் கிளை 92 தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது.

வேலையில்லாத இளைஞர்களும் வேலை இழந்தவர்களும் இத்திட்டத்திற்கு அதிகம் விண்ணப்பம் செய்ததாக அதன் தலைவர் ஃபாத்தின் ஷியாபிகா அப்துல் மானாப் கூறினார்.

அவர்களில் 52 பேர் ஹிஜ்ரா மேற்பார்வையில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் வேலை இழந்தவர்கள் மற்றும் உயர்கல்வியை முடித்து இன்னும் வேலை கிடைக்காமலிருப்பவர்களாவர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக வேலை இழந்த 10 பேருக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டது என்று அவர் சிலாங்கூர் கினியிடம் சொன்னார்.

இங்குள்ள தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள ஹிஜ்ரா தொழில்முனைவோர் முகமது ரஹ்மாட் மிஸ்னானை சந்தித்தப் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களை வழிநடத்துவதற்கு ஏதுவாக ஹிஜ்ரா  பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியளித்து மேற்பார்வையிடுவதை இந்த ஜீரோ டூ ஹீரோ திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.


Pengarang :