ECONOMYNATIONALSELANGORSUKANKINI

சுக்மா 2022- அறுபது தங்கப்பதங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஏப் 2- இவ்வாண்டு செப்டம்பர் 29 முதல் ஆக்டோபர் 8 வரை நடைபெறவிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) குறைந்த து 60 தங்கப்பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடிக்க சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.

மாநில விளையாட்டாளர்களின் திறன் மற்றும் தொடர்ச்சியாக அவர்கள் மேற்கொண்டு வரும் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

முன்பு, 80 பதக்கங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்திருந்தோம். இப்போது அந்த இலக்கை 60 ஆக ஆக்கியுள்ளோம். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை பெறுவதை உறுதி செய்யும்படி சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தை (எம்.எஸ்.என்.) நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

இந்த போட்டியில் சவால்களை எதிர்கொள்வதற்குரிய ஆற்றலை நமது விளையாட்டாளர்கள் எப்போதும் கொண்டிருப்பதை முகமது நஸ்ரி நிஸாம் மர்ஜூக்கி தலைமையிலான எம்.எஸ்.என். தலைமைத்துவம் உறுதி செய்யும் என நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாண்டு சுக்மா போட்டில் மாநிலத்தைப் பிரதிநிதித்து 800 விளையாட்டாளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், எனினும், இவ்விவகாரம் தொடர்வில் கூடியவிரைவில் விவாதிக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர் எண்ணிக்கையை எம்.எஸ்.என். வெளியிடும் என்றார்.

சுக்மா போட்டியில் இடம் பெறவிருக்கும் போட்டிகளின் எண்ணிக்கையை சுக்மா நுட்பக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஈராண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்ட 20 வது சுக்மா போட்டி கிள்ளான் பள்ளத்தாக்கில் இம்முறை நடத்தப்படவுள்ளது.


Pengarang :