ECONOMYHEALTHNATIONAL

நேற்று 12,380 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

ஷா ஆலம், ஏப்.4: கோவிட்-19 நோய்த்தொற்று எண்ணிக்கை நேற்று 12,380 ஆகப் பதிவானது. நேற்று முன்தினம் பதிவானதை விட இந்த எண்ணிக்கை 2,312  குறைவாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 3,682 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் 253 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

தீவிர  சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 253  நோயாளிகளில் 157 பேர் அல்லது 0.1  விழுக்காட்டினருக்கு பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் பயன்பாடு கோலாலம்பூரில் 60 விழுக்காடாகவும் சிலாங்கூரில் 50 விழுக்காடாகவும் உள்ளதாகவும் அவர் சொன்னார்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 0.43 விழுக்காடாக அல்லது 85 பேராக உள்ள வேளையில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை 12,295 பேர் அல்லது 99.31 விழுக்காட்டினர் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக வருமாறு-

பிரிவு 1- 7,559 சம்பவங்கள் ( 61.05 விழுக்காடு)
பிரிவு 2- 4,736 சம்பவங்கள் (38.36 விழுக்காடு)
பிரிவு 3- 32 சம்பவங்கள் (0.26 விழுக்காடு)
பிரிவு 4- 20 சம்பவங்கள் (0.16 விழுக்காடு)
பிரிவு 5- 33 சம்பவங்கள் (0.27 விழுக்காடு)

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று 30 பேர் பலியாகினர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,635 ஆகும். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்து 12 ஆயிரத்து 421 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :