ECONOMYNATIONALSUKANKINI

கம்போடியாவில் அடுத்தாண்டு நடைபெறும் சீ போட்டியில் 40 விளையாட்டுகள் இடம் பெறும்

கோலாலம்பூர், ஏப் 11– தென்கிழக்காசிய நாடுகள் பங்கேற்கும் சீ போட்டியில் 40 வித விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்ததன் மூலம்  கம்போடியா புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் 32வது சீ போட்டிக்கான உபசரணை நாடான கம்போடியா தனது நாட்டின் தேசிய தற்காப்பு கலையான குன் போக்கத்தோர் போட்டியையும் இப்போட்டி பட்டியலில் இணைத்துள்ளது.

சீ போட்டி கடந்த 1977 ஆம் ஆண்டில் தொடங்கியது முதல் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக போட்டிகளை ஏற்பாடு செய்த நாடாக கம்போடியா விளங்குவதாக தென்கிழக்காசிய விளையாட்டு சம்மேளனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சீலாட் கலையை சேர்ப்பதற்கு செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் ஜூன் கூடும் தென்கிழக்காசிய விளையாட்டு சம்மேளனம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம் போல் தடகளப் போட்டிகளும் நீர் சார்ந்த விளையாட்டுகளும் இப்போட்டியை ஆக்கிரமித்துள்ள வேளையில் இவ்வாண்டு வியட்னாமில் நடைபெறும் சீ போட்டியில் விடுபட்ட நீர் போலோ விளையாட்டுக்கும் கம்போடியா வாய்ப்பளித்துள்ளது.


Pengarang :