ECONOMYMEDIA STATEMENTNATIONAL

8,112 நோய்த்தொற்று சம்பவங்கள், ஒரு கிளஸ்டர் நேற்று பதிவு செய்யப்பட்டது

ஷா ஆலம், ஏப்ரல் 11: கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று 10,000 க்கும் கீழே குறைந்து 8,112 சம்பவங்களாக உள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

மொத்தம் 8,087 உள்ளூர் சம்பவங்கள் மற்றும் 25 இறக்குமதி சம்பவங்கள் என்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

15,765 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், நேற்றைய நிலவரப்படி மொத்த எண்ணிக்கை 4,144,728 ஆக உள்ளது.

“இரண்டு மாநிலங்கள் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) படுக்கைகளின் பயன்பாட்டை 50 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பதிவு செய்துள்ளன, அதாவது புத்ராஜெயா 100  விழுக்காடு மற்றும் சிலாங்கூர் 53 விழுக்காடு, அதே சமயம் ICU அல்லாத படுக்கைகளுக்கு புத்ராஜெயா 59 விழுக்காடு படுக்கைகளைப் பதிவு செய்துள்ளது.

“மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள 2,811 நோயாளிகளில், தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) 64 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவையில்லை மற்றும் 110 ICU இல் சுவாச உதவி தேவை,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 56 பேர் அல்லது 0.69 விழுக்காடு குறைவாக இருந்தனர், அறிகுறிகள் இல்லாத ஒன்றாம் மற்றும் லேசான அறிகுறிகள் கொண்ட இரண்டாம் கட்டப் பாதிப்பில் 8,056 சம்பவங்கள் அல்லது 99.31 விழுக்காடு என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

“நேற்று பதிவாகிய மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தில் 68 சம்பவங்களில், 17 சம்பவங்கள் அல்லது 30.36 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது  அறவே பெறாதவர்களாவர், 21 சம்பவங்கள் அல்லது 37.50 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கின்றனர்.

18 சம்பவங்கள் அல்லது 32.14 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ்களைப் பெற்றுள்ளனர், 33 சம்பவங்கள் அல்லது 58.93 விழுக்காட்டினர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 38 சம்பவங்கள் அல்லது 67.86 விழுக்காட்டினர் இரண்டுக்கு மேற்பட்ட நோய் கொண்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கட்டம் வாரியாக வருமாறு-

1 ஆம் கட்டம்: 3,772 சம்பவங்கள் (46.50 விழுக்காடு)

2 ஆம் கட்டம்: 4,284 சம்பவங்கள் (52.81 விழுக்காடு)

3 ஆம் கட்டம்: 29 சம்பவங்கள் (0.36 விழுக்காடு)

4 ஆம் கட்டம்: 10 சம்பவங்கள் (0.12 விழுக்காடு)

5 ஆம் கட்டம்: 17 சம்பவங்கள் (0.21 விழுக்காடு)

மருத்துவமனைக்கு வெளியே நான்கு இறப்புகள் உட்பட நேற்று 12 இறப்புகள் பதிவாகியுள்ளன, நேற்று ஒரே ஒரு புதிய கிளஸ்டர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, இது நேற்று வரை செயலில் உள்ள மொத்த குழுக்களின் எண்ணிக்கையை 130 ஆகக் கொண்டு வந்தது.

 


Pengarang :