ECONOMYSELANGOR

மாற்றுத் திறனாளிகள் தொழில் திறன் பயிற்சி பெறுவதில் சுய வாழ்வு மையம் உதவி- மந்திரி புசார்

ஷா ஆலம், ஏப் 11– சிலாங்கூரிலுள்ள மாற்று திறனாளிகளின் ஆற்றலை பெருக்கதற்கு ஐ.எல்.சி. எனப்படும் சுய வாழ்வு மையத்தின் உருவாக்கம் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிறப்புக் கல்வித் திட்டத்தின் கீழ் கல்வியை முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் பயிற்சிகளை இந்த ஐ.எல்.சி. மையம் வழங்கும் என்று அவர் சொன்னார்.
மாற்றுத் திறனாளிகள் மத்தியில் தொழில் திறனை வளர்ப்பதற்காக மாநில அரசு 10 லட்சம்  வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்தார்.

கல்வியை முடித்த மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு உதவும் நோக்கில் இந்த ஐ.எல்.சி. திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை இலக்காக கொண்டு இந்த முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கடந்த மாதம் 1 ஆம் தேதி கூறியிருந்தார்.

சாதாரண மக்களை அதிக ஆக்கத் திறனும் ஆற்றலும் கொண்டிருக்கும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிலிருந்து விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஐ.எல்.சி. மையம் கடந்த  மாதம் 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது.


Pengarang :